யாழ்.கொக்குவில் ஸ்ரீ முதலி கோவில் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று புதன்கிழமை(10.05.2023) மாலை-06.30 மணியளவில் விசேட அபிஷேகம், பூசைகளுடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் இடம்பெறும். அலங்கார உற்சவ காலங்களில் தினமும் மாலை-06.30 மணியளவில் அபிஷேகம் ஆரம்பமாகி இரவு-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையும், தொடர்ந்து சுவாமி வீதி உலா வரும் திருக்காட்சியும் நடைபெறும்.
எதிர்வரும்-20 ஆம் திகதி மாலை-06.30 மணியளவில் அபிஷேக பூசைகளைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண உற்சவம் சிறப்புற இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.