இணுவிலில் ஏராளமான பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பகிர்ந்தளிப்பு

இணுவிலைச் சேர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிச் செயற்பாட்டாளர்களின் திடீர் ஏற்பாடாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி காய்ச்சப்பட்டுப் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(17.04.2023) மாலை-04 மணி முதல் இரவு-07 மணி வரை இணுவில் கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றது.


இதன்போது வீதியால் சென்ற மக்கள், கிராம மக்கள் எனப் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. 

அத்துடன் சிறுவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உருவான வரலாறு தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது. 


      

(செ.ரவிசாந்)