புத்தூரில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வு

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வு நாளை வியாழக்கிழமை(18.05.2023) மாலை-06 மணி முதல் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது நினைவுச் சுடர் ஏற்றி அதனைத் தொடர்ந்து நினைவுரைகளும் நடைபெறும். மீண்டெழுந்து புதிய பாதையில் முன் செல்வோம் எனும் கருப் பொருளில் மேற்படி நிகழ்வு இடம்பெறும்.