முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக நல்லூரில் மூன்றாவது தடவையாகவும் இரத்ததான முகாம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(14.05.2023) காலை-09.45 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்றது.  

 இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து மூன்றாவது தடவையாக குறித்த இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)