நல்லூர் பிரதேச செயலகத்தில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை(17.05.2023) காலை-10 மணி முதல் நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.