தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் அம்பாறையில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று திங்கட்கிழமை(15.05.2023) இரவு யாழ்.நகரை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை(16.05.2023) காலை-08 மணியளவில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக யாழ்.முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் ஊர்தியின் பயணம் ஆரம்பமாகி யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் நினைவஞ்சலிக்காக நகர்ந்து செல்லவுள்ளது.
எனவே, தமிழ்த்தேசிய ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் ஆரம்ப நிகழ்விலும், நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
(செ.ரவிசாந்)