இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலை சதொசவால் குறைப்பு!

இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோக் கிராம் வெள்ளைச் சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு இன்றுமுதல் 243 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டு 1080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.