வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று திங்கட்கிழமை(15.05.2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் எதிர்வரும்-17ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜாவும், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹாம்பத்தும், வடமேல் மாகாண ஆளுநராக அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் இதுவரை காலமும் பணியாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.