சிறப்பிக்கப்பட்ட குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் பத்தாம் நாள் திருவிழா

'காளி கோயில்' என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான இன்று வியாழக்கிழமை(01.06.2023) காலை-10 மணியளவில் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.


மூலஸ்தான, பரிவார மூர்த்திகளுக்கான பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நண்பகல்-12 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளும் நடைபெற்றன.     

அதனைத் தொடர்ந்து காளி அம்பாள் அலங்கார நாயகியாக அடியவர்கள் புடைசூழ வீதி உலா வரும் திருக்காட்சியும் நடைபெற்றது. வீதி உலா இடம்பெற்ற போது பல பெண் அடியவர்கள் கற்பூரச்சட்டிகள் எடுத்து நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர்.   


 

தொடர்ந்து மதியம் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை(02.06.2023) காலை வைகாசி விசாகப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

(செ.ரவிசாந்)