மயிலணிச் சிவனுக்கு நாளை தேர்த் திருவிழா

'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை வியாழக்கிழமை(01.06.2023) காலை-09 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய மஹோற்சவத்தில் இன்று புதன்கிழமை(31.05.2023) சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(02.06.2023) காலை-09 மணியளவில்  தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.