சிவப்புப் பட்டாடையில் அழகொளிர குப்பிழானில் காளி அம்பாள் வீதி உலா

குப்பிளான் வடபத்திரகாளி அம்பாள்(காளியம்பாள்) ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(30-05-2023)  சிறப்பாக இடம்பெற்றது. 


இன்று இரவு-07.30 மணியளவில் வசந்த மண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சிவப்புப் பட்டாடையால் அலங்கரிக்கப்பட்ட எல்லாம் வல்ல காளி அம்பாளை மங்கள வாத்திய சகிதம் அடியவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வர வீதி உலா இனிதாக இடம்பெற்றது.

பல பெண் அடியவர்கள் கற்பூரச் சட்டிகள் ஏந்தி வந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.

(செ.ரவிசாந்)