யாழ். உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை திங்கட்கிழமை(19.06.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.
இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-28 ஆம் திகதி புதன்கிழமை இரவு திருமஞ்சத் திருவிழாவும், 29 ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசவாகனத் திருவிழாவும், அடுத்தமாதம்-01 ஆம் திகதி சனிக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தேர்த் திருவிழாவும், மறுநாள் 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் தம்ப பூசையைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.