கொடிகாமத்தில் விபத்து: ஒன்பது பேர் காயம்

யாழ்.கொடிகாமம் இராமாவில் பகுதியில் ஏ-09 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(25.06.2023) பகல் நடந்துள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வான் ஒன்றும் மோதியே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒன்பது பேரும் சிகிச்சைகளுக்காகச் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.