புற்றுநோயால் அல்லல்படுவோருக்காக மல்லாகத்தில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்


மல்லாகம் புனித சதாசகாய அன்னை யாத்திரைத் தல வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டுப்   புற்றுநோயால் அல்லல்படுவோரின் இரத்தத் தேவையைக் கருத்திற் கொண்டு புனித சதாசகாய அன்னை இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(25.06.2023) காலை-08.30 மணி முதல் மேற்படி ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.