புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம்-15 ஆம் திகதி நடாத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம்-06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி எக் காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.