யாழ்.பிரதேச செயலகத்தில் நாளை தொழிற்சந்தை


யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை நாளை வெள்ளிக்கிழமை(16.06.2023) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது சேவைத்துறை, விருந்தினர் விடுதி, தனியார் மருத்துவமனை, நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பற்றிய ஆலோசனைகள் ஆகிய தொழில் வெற்றிடங்களில் தொழில் தேடுவோருக்கு தொழில் ஒன்றைத் தெரிவு செய்வதற்கான அரிய வாய்ப்பு குறித்த    தொழிற்சந்தையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாதியர் பயிற்சி, அழகுக் கலை, தையல், கடல் வளம் சார் பயிற்சிகள், மேலும் பல பயிற்சிப் பாடநெறிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(செ.ரவிசாந்)