இன்று வியாழக்கிழமை(15.06.2023) முதல் மேலும் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோக் கிராம் கோதுமை மாவின் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டு 195 ரூபாவுக்கும், ஒரு கிலோக் கிராம் சிவப்பு பருப்பின் விலை நான்கு ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவுக்கும், ஒரு கிலோக் கிராம் கடலைப் பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு 275 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.