வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய இரண்டாம் ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (30.10.2026) மாலை-04 மணியளவில் ஆரம்பமாகிப் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இன்று மாலை-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இடப வாகனத்தில் நல்லூர்க் கந்தன் அடியவர்கள் புடைசூழ உள்வீதி உலா வந்தார்.

