ஆசிரியர் நியமனத்தில் பட்டதாரிகளுக்கு 50 இற்கு 50 என்ற சமவாய்ப்பை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (19.10.2026) முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆசிரியர் நியமன நேர்முகத் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், பட்டதாரிகளை அவல நிலைக்குத் தள்ளாதே! எனக் கோரியும் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமது நியாயமான கோரிக்கையை வெளிப்படுத்துமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினர் கேட்டுள்ளனர்.
.jpg)