சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் வெளியிடப்படும் ஞானச்சுடர் சஞ்சிகையின் ஆடி மாத 307 ஆவது மலர் வெளியீடு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(28.07.2027) காலை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் மேற்படி ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஆசிரியர் திருமதி.உமாராணி பேரானந்தம் மலரின் வெளியீட்டுரையையும், இளைப்பாறிய அதிபர் ஆ.சிவநாதன் மலரின் மதிப்பீட்டுரையும் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.