யாழ்.ஏழாலை தெற்கு சூராவத்தை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை(31.07.2023) முற்பகல்-10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(01.08.2023) முற்பகல்-10.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-05.30 மணியளவில் திருவூஞ்சலைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்துள்ளனர்.