யாழ்.நகரில் நாளை விடுதலை தாளங்கள் இசை நிகழ்வு

கறுப்பு ஜூலை இருள் களைய இசையால் சுடரேற்றுவோம் எனும் தொனிப்பொருளில் விடுதலை தாளங்கள் இசை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(30.07.2023) மாலை-06 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

எம்.சி.ராஜ், தீவ்ர, ஹேப்பி ஜேர்னி ஆகியோர் யாழ்ப்பாணத்தின் கலைஞர்களுடன் இணைந்து வழங்கும் இந்த இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அனுமதி இலவசம் என்பதுடன் அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.