கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவு வைபவம் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதி வெகுசிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில் இதுதொடர்பாக முன்னெடுக்கக் கூடிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(01.08.2023) காலை-10 மணியளவில் மேற்படி கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
எனவே, ஆர்வமுள்ள முன்னாள் ஆசிரிய மாணவர்களை அல்லது கடந்தகாலக் கற்கை அணி சார்ந்த பிரதிநிதிகளை குறித்த கலந்துரையாடலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் அழைப்பு விடுத்துள்ளார்.