யாழில் கறுப்பு ஜீலையின் 40 ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து சுவரொட்டிகள்

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜீலையின் 40 ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணினரால் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் தமிழின அழிப்பிற்குச் சர்வதேச நீதி வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.நகரம், யாழ்.நகரை அண்டிய பகுதிகள், கொக்குவில், திருநெல்வேலி, கந்தர்மடம், நல்லூர் ஆகிய பகுதிகளில் 40 ஆவது வருடக் கறுப்பு ஜீலையை நினைவுகூர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.