கீரிமலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

கருகம்பனை தமிழ்மன்றம், சனசமூக நிலையம், இந்து இளைஞர் கழகம், இந்து விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் 21 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை(09.07.2023) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03.30 மணி வரை கீரிமலை கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0773241755, 0761981178 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும்  இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.