குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு கும்பாபிஷேக தின சங்காபிஷேகம்

குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி  ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நாளை வெள்ளிக்கிழமை(07.07.2023) காலை-09 மணியளவில் கும்ப பூசை, விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

1008 சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று அம்பாள் அலங்கார நாயகியாக வீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து நாளை மதியம் மகேஸ்வர பூசை(அன்னதானம்) நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.