சுழிபுரம் பறாளை ஈஸ்வர விநாயகருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுழிபுரம் பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை வெள்ளிக்கிழமை(07.07.2023) காலை-06 மணி முதல் காலை-06.45 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் இடம்பெறவுள்ளது.

மஹா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09.30 மணியளவில் ஆரம்பமான நிலையில் இன்று வியாழக்கிழமை(06.07.2023) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவமும் நடைபெற்றது.