புலமைப் பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!


இன்று வியாழக்கிழமை(06.07.2023) நள்ளிரவுடன் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடையவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணைக்குழுவின் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன்-15 ஆம் திகதி இணையவழி மூலம் மட்டுமே ஆரம்பமானது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் காலக்கெடு எந்தச் சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர்-15 ஆம் திகதி இடம்பெறுமெனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.