யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று கருத்துரை நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நெருக்கடி காலத்தில் அடக்குமுறைச் சட்டங்கள் எனும் தலைப்பிலான கருத்துரை நிகழ்வு இன்று புதன்கிழமை (05.07.2023) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் வர்த்தக மற்றும் வணிக தொழிலாளர் சங்கத் தலைவரும், சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருள்லிங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உபதலைவர் அகிலன் கதிர்காமர் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.