சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகத்திற்கு மூன்று லட்சம் ரூபா உதவிகள்


சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மலையகத்திற்கு மூன்று லட்சம் ரூபா உதவிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(24.07.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.     

அந்தவகையில் பண்டாரவளை தெமோதரைப் பகுதியில் வசிக்கின்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சந்திமா என்பவரின் மருத்துவத் தேவைகளுக்காக 50,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.

பண்டாரவளை அயிஸ்லெபி தோட்டம் குருக்குடிப் பிரிவில் அமைந்துள்ள ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் கட்டடப் பணிகளுக்காக முதலாம் கட்டமாக ஒரு லட்சம் ரூபா நிதி ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஹாலி எலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் கட்டடப் பணிகளுக்காக  50,000 ரூபா நிதியும், 100,000 ரூபா கட்டடப் பொருட்களும் வழங்கப்பட்டது.


குறித்த செயற்திட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். நிகழ்வில் ஆச்சிரமத் தொண்டர்களும் இணைந்திருந்தனர்.