யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவு நல்லது நூல் அறிமுக விழா

ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வை உள்ளடக்கிய நினைவு நல்லது நூல் அறிமுக விழா எதிர்வரும்-29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல்-02 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர். சி.ரகுராம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் வரவேற்புரையையும், மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா நூலின் அறிமுகவுரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர். என். சண்முகலிங்கன் வாழ்த்துரையையும் ஆற்றவுள்ளனர். 

அரசியல் ஆய்வாளர் எம்.நிலாந்தன் நூலின் ஆய்வுரையையும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எஸ்.விஸ்வநாதன் நூலின் நயப்புரையையும், நூலாசிரியர் ஏற்புரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டினேஷ் கொடுதோர் நன்றியுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

(செ.ரவிசாந்)