நல்லூர்க் கந்தன் மஹோற்சவப் பெருந் திருவிழாவை முன்னிட்டுத் தினமும் பஜனை

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம் முறையும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் மேற்படி ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் இடம்பெறும்.

கொடியேற்றத் திருவிழாவான எதிர்வரும்- 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அடுத்தமாதம்-14 ஆம் திகதி கொடியிறக்கத் திருவிழா வரை முருகப்பெருமான் காலையில் உள்வீதியில் வலம் வரும் போதும், மாலையில் வெளிவீதி வலம் வரும் போதும் பஜனை நடைபெறும்.

குறித்த பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லைக் கந்தப் பெருமானின் திருவருளைப் பெற வருமாறு பாடசாலை மாணவர்களையும், அறநெறிப் பாடசாலை மாணவர்களையும், முருகப்பெருமான் அடியவர்களையும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனம் அன்புடன் அழைத்துள்ளது.

பஜனையில் பங்குபற்ற விரும்புகின்ற பாடசாலைகளும் (அதிபர்/பொறுப்பாசிரியர்/ சைவசமய ஆசிரியர்/ சங்கீத ஆசிரியர்/ஆசிரியர்/அறநெறி ஆசிரியர்), ஆன்மீக சமய நிறுவனங்களும், மேலதிக விபரங்களைப் பெற விரும்புகின்ற ஆர்வலர்களும் இல-692, பருத்தித்துறை வீதி, நல்லூரில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தில் நேரடியாகவோ அல்லது 0772220103 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் அறிவித்துள்ளார்.