யாழ். மாவட்டச் செயலகத்தில் நாளை மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு

மனித வேலைவாய்ப்புத் திணைக்களம் யாழ்.மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை-2023 நிகழ்வு நாளை சனிக்கிழமை(19.08.2023) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி தொழிற்சந்தை நிகழ்வில் ஆடைத் தொழிற்சாலை, கணக்கியல் துறை, ஹோட்டல் துறை, சந்தைப்படுத்தல் துறை, தாதியர் பயிற்சி நெறி, காப்புறுதித் துறை, கணினித்துறைப் பயிற்சி நெறி, சுப்பர் மார்க்கெட், பாதுகாப்புச் சேவை, தனியார் உற்பத்தி நிறுவனங்கள்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்கவுள்ளன. 

ஆகவே, தொழில் நாடுவோருக்குத் தொழிலொன்றைத் தெரிவு செய்வதற்கான அரிய வாய்ப்பாக இந்த தொழிற்சந்தை நிகழ்வு அமைந்துள்ளதாகவும், தொழில்நாடுவோர் தவறாது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.