யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தற்போது துணைவேந்தராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும்- 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் மீண்டும் அவரே அடுத்த துணைவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் இன்று வெள்ளிக்கிழமை(18.08.2023) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)