'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கும்பாபிஷேக தின உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(20.08.2023) சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை அதிகாலை-05.30 மணி முதல் 108 சங்காபிஷேகம், சர்வமங்கள பூசை, வசந்தமண்டபப் பூசை, திருவீதி உலா என்பன நடைபெறும்.
அத்துடன் நாகசதுர்த்தியை முன்னிட்டு நாகபூசணித் தாயாருக்கும், நாகராஜருக்கும் ஸ்நபனாபிஷேகமும், விசேட பூசையும் இடம்பெறும்.