தெல்லிப்பழையில் சிவமகாராசாவின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகருமான அமரர்- மாமனிதர் சி.சிவமகாராசாவின்  17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை(20.08.2023) காலை-09 மணி முதல் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ந.உமாகரன் தலைமையில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் நிகழ்வில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி ப.நந்தகுமார் பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர் இ.சிவரூபன், செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் சா.செ.இளங்கோவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், இளைப்பாறிய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சண்முகநாதன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.பிறேமிலன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றவுள்ளதுடன் கூட்டுறவாளர் கெளரவிப்பும் விருது வழங்கலும் நடைபெறுமெனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

(செ.ரவிசாந்)