யாழ்.பல்கலைக்கழகத்தில் நீர் தொடர்பான மைமல் பொழுது உரையாடல்

வடமாகாண நீர் உரையாடல் வட்டம், இளைய நீர் துறைமையாளர்கள் வடக்கு வட்டம் மற்றும் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் இணைந்து நடாத்தும் மைமல் பொழுது உரையாடல் தொடரின் அமர்வு- 24 எதிர்வரும் வியாழக்கிழமை(24.08.2023) மாலை-04 மணி தொடக்கம் மாலை-06 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

முனைவர் ஜோகேஷ் ஜடேஜா வளவாளராகக் கலந்து கொள்ளும் உரையாடல் தொடரில் அளவிடல் கண்காணித்தல் மூலம் நிலத்தடி நீர் வளம் பேணலில் மக்கள் மைய நடவடிக்கைகள்: இந்திய அனுபவங்கள் எனும் தலைப்பிலான கருத்துரை இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் 0773423576 எனும் தொலைபேசி இலக்கமூடாகத் தொடர்பு கொண்டு வரவினை உறுதிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, வளவாளர் முனைவர் ஜோகேஷ் ஜடேஜா மார்பி எனப்படும் நீர் தொடர்பான செயல் திட்டத்தின் ஊடாக இந்திய குஜராத் ராஜஸ்தான் மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக முன் நின்று வழிநடாத்தி மக்கள் ஈடுபாட்டினை வளர்த்தெடுத்த சாதனையாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.