உடுவிலில் 25 பேர் ஆர்வத்துடன் குருதிக் கொடை

                                           


உடுவில் மத்திய விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(10.09.2023) காலை-09 மணி முதல் உடுவில் டச்சு வீதியில் அமைந்துள்ள வசி  முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 25 குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.



(செ.ரவிசாந்)