கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாளை நூற்றாண்டு கால ஆங்கிலத் தின விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆங்கில மன்றத்தின் ஏற்பாட்டில் நூற்றாண்டு கால ஆங்கிலத் தின விழா நாளை வெள்ளிக்கிழமை(22.09.2023) காலை-09 மணி முதல் மேற்படி கலாசாலையின்  ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் எம். ஜீவராணி புனிதா பிரதம விருந்தினராகவும், பலாலி ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபர் கவிஞர். சோ.பத்மநாதன் சிறப்பு விருந்தினராகவும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் ஆங்கிலத் துறை விரிவுரையாளர் திருமதி.எம்.ஜே.எஸ். முத்துக்குமாரசாமி கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.