மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, கட்டமைப்பு வேலைகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(16.09.2023) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.நாவாந்துறையில் நாவலர் வீதிப் பகுதி, கோம்பையன் மணல், பொம்மைவெளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.