நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்த கத்திக் காவடி


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த்திருவிழா நேற்றுப் புதன்கிழமை(13.09.2023) சிறப்பாக இடம்பெற்றது.


இதன்போது அளவெட்டியைச் சேர்ந்த 21 வயதான வி.தேனுராஜ் என்ற இளம் அடியவர் அளவெட்டி சிவன் ஆலயத்திலிருந்து நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு கத்திக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினார். 

குறித்த அடியவர் விசித்திரமான முறையில் தனது உடலைக் கடுமையாக வருத்திக் காவடி எடுத்து வந்த காட்சி நல்லூரான் ஆலயச் திரண்டிருந்த அடியவர்கள் மற்றும் வீதியால் சென்ற பொதுமக்கள் பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்ததுடன் மெய் சிலிர்க்கவும் வைத்தது. இதேவேளை, அளவெட்டியிலிருந்து 13 கிலோ மீற்றர் தூரம் வரை இவர் கத்திக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)