நல்லூர் வரையான தியாகதீபம் திலீபனின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி நாளை ஆரம்பம்


பன்னிரண்டு தினங்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உன்னத இலட்சியத்திற்காய் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 'திலீபன் வழியில் வருகிறோம்' எனும் தொனிப் பொருளிலான தியாகதீபம் திலீபனின் நினைவு சுமந்த அவரது உருவப்படத்தைத் தாங்கிய ஊர்திப் பவனியானது நாளை வெள்ளிக்கிழமை(15.09.2023) காலை-09.45 மணியளவில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

குறித்த ஊர்திப் பவனியானது எதிர்வரும்-26 ஆம் திகதி காலை-10 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் நிறைவடையும். எனவே, தங்களுடைய பிரதேசங்களால் ஊர்திப் பவனி வருகின்ற போது மக்கள் ஒவ்வொருவரும் மலர் தூவி வணக்கம் செலுத்துமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.