வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் வெகு விமரிசை

 


யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 08.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 


17 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்றம் தொடக்கம் 5 ஆம் திருவிழா வரை சுவாமி உள் வீதியும், 6ஆம் திருவிழா முதல் 16ஆம் திருவிழா வரை வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.