மாம்பழ உற்பத்தியில் சிறந்த நடைமுறைகளுக்கான பயிற்சிநெறி

இலங்கைப் பழ மற்றும் மரக்கறி உற்பத்தியாளர்கள், பதப்படுத்துனர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், ஏற்றுமதிக்கான TOM EJC மாம்பழ உற்பத்திக்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான செயற்பாட்டுடன் கூடிய செயலமர்வு நாளை சனிக்கிழமை(16.09.2023) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.செ.சுகந்தினி பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.