சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனையும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கலும் நிகழ்வு ஏழாலைச் சந்தியில் அமைந்துள்ள ஏழாலை வடக்கு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(01.10.2023) பிற்பகல்-02 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அன்றையதினம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கான இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.