நீதிக்கே உரிமை இல்லாத நாடாக இலங்கை!


முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகுமளவுக்கு நீதித்துறையை மதிக்காததொரு சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எங்கே ஜனநாயகம்? ஜனநாயக உரிமைகள் எங்கே? நீதிக்கே உரிமை இல்லாத நாடாகத் தான் இலங்கை காணப்படுகின்றது என இலங்கை திருச்சபையின் யாழ்.குரு முதல்வர் எஸ்.டி.பி. செல்வன் காட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

யாழில் இன்று வெள்ளிக்கிழமை(29.09.2023) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.