அரியாலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்



அமரர். அபிஷனின் முதலாவது ஆண்டு ஞாபகார்த்தமாக சக நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(01.10.2023) காலை-09 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

 மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0768397412 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.