நாளை ஞாயிற்றுக்கிழமை(01.10.2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக் கூடிய முள் கரண்டிகள், குழாய்கள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுக்கள் மற்றும் உணவுக் கொள்கலன்கள் என்பன இவற்றுள் உள்ளடங்குகின்றன.
இதேவேளை, தடைகளை மீறிக் குறித்த பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது.