தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு நாளை பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை(06.09.2023) காலை-09.27 மணி தொடக்கம் 10.44 மணி வரையுள்ள  சித்தாமிர்த யோக துலா லக்கின சுபமுகூர்த்த வேளையில் இடம்பெறவுள்ளது.

பாலஸ்தாபன கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் நேற்றுத் திங்கட்கிழமை(04.09.2023) காலை-09.09 மணிக்கு ஆரம்பமானது. துர்க்கை அம்மனுக்கும், இதர பரிவார மூர்த்திகளுக்கும், ஸ்தூபிகள் முதல் நான்கு கோபுரங்களுக்கும் திருப்பணி வேலைகளை முன்னிட்டே பாலஸ்தான கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதாகவும், பாலஸ்தாபன கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் யாவும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதமகுரு மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தலைமையில் இடம்பெறுமெனவும் மேற்படி ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்துள்ளனர். 

(செ.ரவிசாந்)