சுதுமலை திருலிங்கேச்சரம் மரகதவல்லித் தாயார் உடனுறை கயிலைநாதருக்கு நாளை திருக்குடமுழுக்குப் பெருவிழா


சுதுமலை திருலிங்கேச்சரம் மரகதவல்லித் தாயார் உடனுறை கயிலைநாதர் ஆலய திருக்குடமுழுக்குப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(29.09.2023) காலை-09.15 மணி தொடக்கம் முற்பகல்-10.15 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளதாக மேற்படி ஆலயக் குரு முதல்வர் அகோரசிவம் உமையரசு தெரிவித்தார்.   


     


திருக்குடமுழுக்குப் பெருவிழாவுக்கான வழிபாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை(26.09.2023) காலை-08.30 மணியளவில் ஆரம்பமானது. இன்று வியாழக்கிழமை(28.09.2023) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை அடியவர்கள் பால்காப்புச் சாத்தும் வைபவம் நடைபெற்றது.      

இதேவேளை, மேற்படி ஆலயத்திற்கென இந்தியாவில் புகழ்பூத்த சிற்ப வல்லுநர்களால் ஐம்மை உலோகத்தால் அழகு பொருந்திய எழுந்தருளித் திருவுருவம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.